Jump to content


Photo

E - புத்தகம் [ மைசூர் முதல் போயஸ் கார்டன் வரை, நினைவு நாடாக்கள் - கவிஞர் வாலி & சுதேசி தேசம் சுரண

Books

  • This topic is locked This topic is locked
2 replies to this topic

#1 Mr.S

Mr.S
  • VIP
  • 269 posts

Posted 12 February 2019 - 06:16 AM

*
POPULAR

நூல் பெயர் :
மைசூர் முதல் போயஸ் கார்டன் வரை
 
நூல் குறிப்பு:
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை என்றாலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் ஆளுமையாகத் திகழ்ந்தார் அவர்தான் ஜெயலலிதா.
 
தன் வழிகாட்டி எம்.ஜி.ஆர் மறைவுக்கு முன்னும் பின்னும் தனக்கு ஏற்பட்ட சோதனைகளைத் தாங்கி, தாண்டி தமிழக அரசியலிலும் ஏன் இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார் ஜெயலலிதா. சிறு வயது முதலே தனிமை வாழ்க்கை வாழ்ந்ததால்தான் என்னவோ ‘நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்’ என்று அவர் ஒருமுறை சொன்னார். அந்த சொற்றொடரில் பொதிந்திருக்கும் வேதனைகளை அவரே அறிவார். ஜெயலலிதாவை அவ்வளவு எளிதில் யாரும் சந்திக்க முடியாது என்ற பிம்பத்தை அவரே உருவாக்கினாரா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது வேறு.
 
ஆனால் இந்த நூலைப் படிக்கும்போது அவர், இந்த ஆணாதிக்கச் சமுகத்தில் எத்தனை இடர்களைச் சந்தித்து உச்ச இடத்தைத் தொட்டார் என்பதை அறியமுடியும். விகடன் இணைய தளத்தில் தொடராக வெளிவந்தவை இப்போது நூலாகியிருக்கிறது. இது ஜெயலலிதா பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முக்கிய ஆவணமாகத் திகழும்!
 
ஆளுமைப் பண்பே பெண்கள் மத்தியில் இவரை ரோல் மாடலாக ஆக்கியது இவரை அம்மா என்று கொண்டாட வைத்தது என்றும் இந்த நூல் நிறுவுகிறது.
 
6a002c85998eb7d23a28120a5240f1ec.jpg
 
Download Link
 
 
=========================
 
நூல் பெயர் :
நினைவு நாடாக்கள் [ கவிஞர் வாலி ]
 
நூல் குறிப்பு :
 
நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நின்றார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் அல்ல... பக்தி இலக்கியத் துறையிலும் சாதனை படைத்து ‘காவியக் கவிஞர்’ என புகழ் மாலை சூட்டப்பட்டவர். அவதார புருஷன், கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் போன்ற படைப்புகள் வாலியின் வலிமை! கவிதை, கட்டுரை, பேச்சு, நடிப்பு, பாட்டு, ஓவியம் என பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் வாலி, தமிழில் புதிய சொல்லாட்சியை ஏற்படுத்திய கலை வித்தகர். திரைத் துறையில் பாடல் எழுதிய அனுபவங்களையும், அவருடன் பழகிய நெஞ்சுக்கினிய நேசர்களையும், அந்தரங்கமான நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடியே அவர் சொல்லும் வார்த்தைகள் மனதை வசீகரிக்கின்றன! சைக்கிளில் ‘குரங்குபெடல்’ போட்டது, பள்ளிப் பருவத்தில் நாடகம் போட்டது, பத்திரிகையில் கவிதை எழுதியது, திருச்சி வானொலியில் பணியாற்றியது, கம்பன் கழகம் கவியரங்கில் தலைமை தாங்கியது, டி.எம்.எஸ்., சந்திப்பால் சென்னைக்கு வந்து, நாகேஷ் உடன் சேர்ந்து சினிமாவில் போராடிக்கொண்டு இருந்தது... என அத்தனை நிகழ்வுகளையும் மிகுந்த நினைவாற்றலோடு இங்கு பதிவுசெய்திருக்கிறார் வாலி. அவர் பாடல்கள் எழுதிய சம்பவங்களைச் சொல்லும்போது, நம் நினைவுகளும் அந்தந்தக் காலகட்டத்துக்கு விரைகிறது. 50 அத்தியாயங்களில் 80 ஆண்டு நினைவுகளைப் பதிவுசெய்து இருக்கிறார். ‘அனுபவமே அழியாத பெரும் சொத்து; நினைவே சுகம்!’ என்பதை தன் எழுத்தில் நிரூபித்திருக்கிறார் கவிஞர் வாலி. 
 
228a61da3c1335e3e448947f99ac9b4d.jpg
 
Download Link
 
 
=========================
 

நூல் பெயர் :
 
சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு
 
நூல் குறிப்பு :
 
இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இன்றல்ல நேற்றல்ல... மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷாரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும் இந்தியாவை யார், எவ்வளவு சுரண்டுவது என்ற கொள்ளையடிக்கும் போட்டி 17&ம் நூற்றாண்டில் இருந்தே நடந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அவற்றை விநியோகத்ததில் பெரும் ஊழல் நடந்தது. இதுபோன்ற சுரண்டல்களைத் தடுக்க, இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947&ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனிய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் முழங்கினர். ஆனால், நடந்தது என்ன? இன்னமும் நாட்டின் பெரும் பிரச்னையாக ஊழல் உள்ளது. அது இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறது. தேசத்தந்தை மகாத்மாவின் பெயரால் ஊழல் ஓங்கி ஒலித்தது. ஆம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் ஆகியவை ஊழலுக்குத் துணை போயின. மக்களுக்கான திட்டங்களில் சுரண்டல்கள் தொடங்கின. விடுதலை அடைந்தது முதல் மன்மோகன்சிங் காலம் வரை இந்தியாவில் ஊழல் எந்த அளவுக்கு புரையோடிப் போய் இருக்கிறது என்பதை துல்லியமாக அலசி துவைத்தெடுக்கிறது இந்த நூல். இந்திய துணைக்கண்டத்தில் சுரண்டல் எதுவரை பாய்ந்திருக்கிறது? அதன் வீச்சு தேசத்தை எங்கே அழைத்துச் செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக, எடுத்துக்காட்டுக்களுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். நம் தேசத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு ஊழலுக்கும் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன? ஊழலின் ஊற்றுக்கண் யார்? சுரண்டல்காரர்கள் நம் தேசத்தை சுரண்டியது எப்படி? எளிமையான நடையில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர். சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாற்றைப் படியுங்கள். தேசம் களவு போவதை கண்டுபிடித்துக் கொள்வீர்கள்.
 
a8015c070b11fa92816f2ad37691b90f.jpg
 
Download Link
 

  • SHARPU, music lover, tamilrockers007 and 9 others like this

#2 TheLOVEAdmin

TheLOVEAdmin

    Head Chief Commando

  • VIP
  • 764 posts

Posted 12 February 2019 - 06:20 AM

Bro Amma yeppadi Sethanga?



#3 I LOVE ME

I LOVE ME
  • Members
  • 37 posts

Posted 12 February 2019 - 02:18 PM

Nice